» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வெள்ளி 12, நவம்பர் 2021 3:56:44 PM (IST)

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கிகளிலும் மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. இதனால் மாநிலங்களில் தலைநகரங்களில் உள்ள மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதி இருந்தது. ஆனால், கிராம புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர்.

இதனால் நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் வீணாகி வருகிறது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்கள் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அவற்றின் கிளை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்ற முடியாமல் போனது.

இதனால் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் இனிமேல் பொதுமக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம். இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கு அறிக்கை அனுப்பி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், போதுமான அளவு சில்லரை நாணயங்களை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory