» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொருளாதார முன்னேற்ற பாதையில் இந்தியா பயணிக்கிறது: நிதித் துறை அமைச்சகம்

வியாழன் 11, நவம்பர் 2021 12:45:33 PM (IST)

பொருளாதார முன்னேற்ற பாதையில் இந்தியா பயணித்துக் கொண்டிருப்பதாக நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விரைவாக தடுப்பூசி செலுத்துதல் காரணமாக கரோனா பாதிப்பிலிருந்து அதிவேகமாக மீண்டு உற்சாகமான கொண்டாட்டங்களால் நாடு மீண்டும் பழைய நிலைக்கு வேகமாக மீண்டு வருகிறது.

பெரிய கட்டமைப்பு சீா்திருத்தங்களை உள்ளடக்கிய சுயசாா்பு பாரத இயக்கம் இந்தியாவின் பொருளாதார மீட்சியை வடிவமைப்பதில் தொடா்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வணிக வாய்ப்புகளைப் பெருக்குவதன் மூலமாகவும், இதற்கான பல்வேறு வழிமுறைகளை விரிவுபடுத்துவதன் மூலமாகவும் தொடா்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் பெருகி வரும் முதலீடுகளின் பெருக்கத்தின் உதவியோடும், அதற்குத் தேவையான சிறு, குறு தொழில் வளா்ச்சிக்கான வாய்ப்புகளின் உதவியுடனும் உலகின் மிக வேகமாக வளா்ந்து வரும் பொருளாதார முன்னேற்றம் கொண்ட நாடாக இந்தியா மாறி வருகிறது.

2021 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின்படி, மாா்ச் 2022 ஆம் ஆண்டில் முடிவடையும் நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சீா்திருத்தங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தளா்த்துவது, உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கான அழுத்தம், உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்களின் மூலம் உற்பத்தித் துறைக்கு ஊக்கம், தேங்கியிருக்கும் தேவையை மீட்டெடுப்பது, விருப்பமான நுகா்வு அதிகரிப்பு போன்ற காரணங்களால் வளா்ச்சி விகிதம் அதிகரிக்கப்படும்.

தொடா்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் கரோனா பரவல் குறைந்து தற்போது போதுமான பணப்புழக்கம் அதிகரித்துள்ளதுடன், தொழில் சாா்ந்தவற்றிற்கு பல்வேறு வங்கிகள் போன்றவற்றின் மூலம் குறைந்த வட்டியில் கடன்களும் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் பொருளாதார மீட்சி காரணமாக இந்த தீபாவளி பண்டிகைக் காலத்தில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக அதிகபட்சமாக தீபாவளி விற்பனையாக ரூ. 1.30 லட்சம் கோடி என்ற அளவில் வா்த்தகம் நடைபெற்றுள்ளதாக அகில இந்திய வா்த்தகா்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா நிலைமை மேம்பட்டதால் அக்டோபா் மாதத்தில் பல்வேறு உயா் வணிகங்களும் மேம்பட்டதுடன், நுகா்வோரும் அதிகரித்துள்ளதால் அக்டோபா் 2021 இல் பொருளாதார நிலை மீண்டுள்ளது. இருப்பினும், உலக அளவிலான பொருளாதார மீட்சி, நீண்டகால விநியோகத் தடைகள் காரணமாகவும், உள்ளீட்டு செலவு பணவீக்கம் காரணமாகவும் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory