» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் ரூ.100 கோடி மோசடி: கேரளாவில் 4 பேர் கும்பல் கைது

செவ்வாய் 9, நவம்பர் 2021 3:40:00 PM (IST)

கேரளாவில் கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலத்தில் கிரிப்டோ கரன்சி என்ற டிஜிட்டல் பணத்தின் பேரில் மோசடி நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதன் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் ஒரு கும்பல் பொதுமக்களிடம் அதிக அளவில் பணத்தை பெற்று இரட்டிப்பாக தருவதாக மோசடியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி கண்ணூர் பகுதியை சேர்ந்த இளம் தொழில் அதிபர் ஒருவர் புகார் தெரிவித்தார். இதன்பேரில் கண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நவீன முறையில் ஆன்லைன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்ணூர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், சபீக், வாசிம் முனாவரலி மற்றும் முகமது சபீக் ஆகியோர் என தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் ஏராளமானோரிடம் அதிக பணம் பெற்று கிரிப்டோ கரன்சியாக திருப்பி தருவதாக கூறி ரூ.100 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதற்காக தனியாக நிறுவனம் நடத்தி அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்திற்கு பதிலாக கிரிப்டோ கரன்சி என்னும் டிஜிட்டல் பணம் திருப்பி தருவதாக கூறி ஏமாற்றி உள்ளனர். மேலும் அவர்கள் பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory