» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜஸ்தானில் பள்ளி, கல்லூரிகள் 100 சதவீத இருக்கையுடன் செயல்பட அரசு அனுமதி

செவ்வாய் 9, நவம்பர் 2021 3:35:18 PM (IST)

பயிற்சி நிறுவனங்களில் 100 சதவீத இருக்கையுடன் செயல்பட ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டன. கரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை என நீடித்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல்  இருந்தன. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் 50 சதவீத இருக்கையுடன் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில்,  1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வகுப்பறை செயல்பாடுகள் 100 சதவீத திறனுடன் நடைபெறலாம் என்று நேற்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 15-ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுடன் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பயிற்சி நிறுவனங்களில் 100 சதவீத இருக்கையுடன் செயல்பட ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தானில் 50 சதவீத இருக்கையுடன் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory