» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலக தலைவர்கள் பட்டியலில் மோடி மீண்டும் முதலிடம் நாட்டிற்கே பெருமை: அமித்ஷா வரவேற்பு!!

திங்கள் 8, நவம்பர் 2021 11:25:17 AM (IST)

உலக தலைவர்களிடையே பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்திருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய விஷயம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்..

‘மார்னிங் கன்சல்ட் பொலிடிக்கல் இன்டெலிஜன்ஸ்’ என்ற உலகளாவிய கருத்து கணிப்பு நடத்தும் அமைப்பு, 13 நாடுகளின் தலைவர்களிடையே மக்களால் விரும்பப்படுகிற, மிகவும் பிரபலமான உலக தலைவர் யார் என்று கருத்து கணிப்பு நடத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 13 நாட்டு தலைவர்களிடையே நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் வயது, இனம், பாலினம், பிராந்தியம், கல்வி அறிவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு கருத்து கணிப்பு நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 70 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம் வகிக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டில் இதே அமைப்பின் கருத்து கணிப்பில் அவர் முதலிடம் பிடிப்பது இது 3-வது முறை ஆகும்.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "உலக தலைவர்களிடையே பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்திருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய விஷயம். இது மோடி மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை, கடின உழைப்பு ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்” என்று அமித் ஷா பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிNov 9, 2021 - 02:46:07 PM | Posted IP 162.1*****

How much paid for this award? Public tax paying useless like that

unmaiNov 9, 2021 - 03:50:35 AM | Posted IP 162.1*****

paid advertisement, joke of the year

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory