» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும்: ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு!

திங்கள் 8, நவம்பர் 2021 10:31:50 AM (IST)

தமிழத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து, மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  சென்னையில் நேற்று மாலை தொடங்கிய பேய் மழை இன்று அதிகாலை வரை பெய்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. நேற்று இரவு மட்டும் மொத்தம் 207 மிமீ மழை பெய்துள்ளது.சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை பத்திரமாக வெளியயேற்றும்படி அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தமிழகத்தின் பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. தமிழகத்தில் மழைக்கு பலர் இறந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறி இருப்பதாவது: சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசினேன். மாநிலத்தில் நிலவும் நிலவரம், பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். மழையால் அனைவரின் நலம் மற்றும் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory