» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கார் விபத்தில் மாடல் அழகிகள் 2பேர் பலி: கேரளாவில் சோகம்!

திங்கள் 1, நவம்பர் 2021 4:30:54 PM (IST)



கேரளாவில் இன்று அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில் மிஸ் கேரளா அழகிகள் இருவர் விபத்தில் உயிரிழந்தனர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் அன்சி கபீர் (25). அன்சி கபீர் கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் செய்து வந்தார்.கடந்த 2019-ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த மிஸ் கேரளா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். இவரது தோழி அஞ்சனா சாஜன் (26). திருச்சூரை சேர்ந்த இவர் ஆயுர்வேத டாக்டர். இவரும் 2019-ம் ஆண்டு நடந்த மிஸ் கேரளா அழகி போட்டியில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்தார்.

அன்சி கபீரும், அஞ்சனா சாஜனும் தோழிகள். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை 1-மணி அளவில் எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை அன்சி கபீர் ஓட்டினார். அவர்களுடன் மேலும் இரண்டு நண்பர்கள் இருந்தனர். எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது காருக்கு முன்னால் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் மீது மோதாமல் இருக்க அன்சி கபீர் காரை திருப்பினார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த அன்சி கபீர், அஞ்சனா சாஜன் மற்றும் அவர்களுடன் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அதிகாலை நேரம் என்பதால் விபத்து பற்றி உடனடியாக தகவல் தெரியவில்லை.அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் விபத்து பற்றி எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அன்சி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.காரில் இருந்த மற்ற இருவரும் படுகாயங்களுடன் இருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .


மக்கள் கருத்து

adaminNov 1, 2021 - 06:44:48 PM | Posted IP 162.1*****

ulagam alagu endru paarapatcham paarpathillai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory