» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு: உ.பி. முதல்வர்

வியாழன் 28, அக்டோபர் 2021 11:25:01 AM (IST)

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடியவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்படும் என  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா-பாகிஸ்தான் இடையே 20 ஓவா் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடா்ந்து பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

அதில், வெற்றியை கொண்டாடிய உத்தரப்பிரதேச மாநிலத்தின் 5 மாவட்டங்களை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இதுவரை 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 7 பேர் மீதும் தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

INDIANOct 28, 2021 - 02:40:49 PM | Posted IP 173.2*****

JAI HIND.... GREAT

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory