» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: மேற்கு வங்க அரசு

புதன் 27, அக்டோபர் 2021 5:38:29 PM (IST)

தீபாவளி பண்டிகைக்கு 2 மணிநேரம் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை வெடிக்க மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாக தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாநிலங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில், பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்து மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "மேற்கு வங்கத்தில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்க அனுமதிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இரவு 8 முதல் 10 மணிவரை மட்டுமே மக்கள் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், சத் பூஜைக்கு காலை 6 மணிமுதல் 8 மணிவரையும், கிறிஸ்துமஸ் பண்டிக்கை மற்றும் புத்தாண்டிற்கு நள்ளிரவு 11.55 முதல் 12.30 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.”


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory