» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்கத்தில் நவ.15 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

திங்கள் 25, அக்டோபர் 2021 5:17:50 PM (IST)

மேற்கு வங்கத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 15-இல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொற்று படிப்படியாக குறைவதையடுத்து தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்குவங்கத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மம்தா இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பேசுகையில், "9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கு நவம்பர் 15-இல் பள்ளிகள் திறக்கப்படும். மேலும், பஞ்சாப் அரசை போலவே நாங்களும் எல்லைப் பாதுகாப்பு படையின் எல்லை விரிவாக்கத்திற்கு எதிராக போராடி வருகிறோம். எங்கள் எல்லைப் பகுதி முழுவதும் அமைதியான சூழல் நிலவி வருகின்றன. சட்டம் - ஒழுங்கு என்பது காவல்துறையின் பணி. மாநில அரசுசின் சட்டங்களின் அடிப்படையிலேயே மாநில அரசுகள் செயல்படும்.” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory