» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போதைப்பொருள் வழக்கில் கைது : மும்பை சிறையில் மகனை சந்தித்து பேசிய ஷாருக்கான்!

வியாழன் 21, அக்டோபர் 2021 12:26:31 PM (IST)



போதைப்பொருள் வழக்கில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆர்யான் கானை நடிகர் ஷாருக்கான் சந்தித்து பேசினார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2-ம் தேதி கடலோரத்தில் ஒரு சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதைப் பொருள் விருந்து நடந்தது. பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற போதை தடுப்பு பிரிவு போலீஸார் கப்பலில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

அப்போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான், முக்கிய புள்ளிகள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து ஆர்யான்கான் உள்ளிட்ட 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற அடிப்படையில் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டுளளதாகவும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துளளதாகவும் போதை தடுப்பு பிரிவு போலீஸார் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது ஆர்யான் கான் உள்ளிட்டவர்கள் 14 நாள் நீதிமன்ற காவலில் உள்ளனர். ஆர்யான் கான் தனது வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே மூலம் ஜாமீன் கோரி 10 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்து இருந்தார். ''ஆர்யான்கான் தனது நண்பரான அர்பாஸ் மெர்சண்ட்டிடம் இருந்து 6 கிராம் போதைப்பொருளை வாங்கியதை ஒப்புக் கொண்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி போதை தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர். 

இதனால் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதேபோல் நேற்றும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான்கானை தந்தையும், நடிகருமான ஷாருக்கான் இன்று சந்தித்தார். ஆர்யான்கான் கைது செய்யப்பட்ட பிறகு அவரை ஷாருக்கான் முதன்முறையாக சந்தித்துள்ளார். ஷாருக்கான் சுமார் 20 நிமிடங்கள் தனது மகனை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory