» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தில்46 பேர் பலி: ரூ.4லட்சம் நிவாரண நிதி - முதல்வர் அறிவிப்பு

புதன் 20, அக்டோபர் 2021 12:22:17 PM (IST)



உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10-ம்தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைஉருவானது. இதன் காரணமாக கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்கிறது. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன.

இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அக்டோபர் 17 தொடங்கி 19 ஆம் தேதி வரை மட்டுமே 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நைனிடால், அல்மோரா, சம்பாவத், பித்ரோகர், உத்தம் சிங் நகர், சமோலி, பாகேஸ்வர் ஆகிய பகுதிகளில் மட்டும் 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் 9 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், நிலச்சரிவாலும் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று மாலை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மழை, வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory