» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: ஏப்.24ம் தேதி முன்பதிவு முன்பதிவு தொடங்குகிறது!

வியாழன் 22, ஏப்ரல் 2021 4:45:32 PM (IST)

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மே 1ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 24ம் தேதி தொடங்குகிறது. 

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்தி  பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. விரைவில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.  கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டபோது, முதலில் முன்களப் பணியாளர்களும் சுகாதாரத் துறையினரும் தடுப்பூசி போடப்பட்டது. 

அதன்பின்னர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணைநோய்கள் உள்ள 45 வயதைத் தாண்டியவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவுபடுத்தும் வகையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மே 1ம் தேதி தொடங்கவிருக்கிறது. 

தடுப்பூசிக்கான முன்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 24) தொடங்குகிறது. COWIN வலைதளத்தில் முன்பதிவுசெய்து கொள்ளலாம். பயனாளிகள் cowin.gov.in என்ற வலைதளத்திற்குள் சென்று, 10 டிஜிட் செல்போன் எண் அல்லது ஆதார் எண்ணைப் பதிவுசெய்ய வேண்டும். அதன்பின் சம்பந்தப்பட்ட மொபைலுக்கு ஓடிபி வரும். அதனைப் பதிந்தால் வெரிபிகேசன் முடிந்து பதிவு செய்யப்பட்டுவிடும்.

தகவல் சரிபார்க்கப்பட்டதும், தடுப்பூசி பதிவுக்கான பக்கம் திறக்கும். அதில் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றின் போட்டோ ஆதாரம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும். எந்தத் தேதியில், எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது என்றும் தேர்ந்தெடுக்கலாம். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products


Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory