» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குங்கள்: பிரதமருக்கு கேரள முதல்வர் கோரிக்கை!

புதன் 21, ஏப்ரல் 2021 5:34:56 PM (IST)

கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். 

மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கரோனா தடுப்பூசி நிறுவனமான சீரம் தடுப்பூசியின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி, தற்போது விற்கப்படும் கரோனா மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசி விலை இருமடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மாநில அரசுகளுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் கரோனா தடுப்பூசி மொத்தத் உற்பத்தியில் 50 சதவீத உற்பத்தியை மத்திய அரசும், 50 சதவீத உற்பத்தியை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்குமாறும் விதிக்கப்பட்டுள்ள புதிய விதியை நீக்கக்கோரியுள்ள பினராயி விஜயன் தடுப்பூசிகளை மத்திய அரசு முழுவதுமாக கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு விநியோகிக்க வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Thalir Products

Black Forest CakesThoothukudi Business Directory