» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா 2வது அலை தீவிரம்: இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவு : ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

திங்கள் 19, ஏப்ரல் 2021 5:45:37 PM (IST)

இந்தியாவில் கரோனா 2வது அலை தீவிரம் அடைந்துள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவு அடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று வர்த்தகம் துவங்கியதும் மளமளவென்று 1469 புள்ளிகள் சரிந்தது. தொடர்ந்து நடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் இழப்பை ஈடுகட்டி 882.61 என்ற அளவில் இழப்பை குறைத்துக் கொண்டது. 

திங்களன்று சென்செக்ஸ் 1.81 சதவீதம் அல்லது 882.61 புள்ளிகளை இழந்தது இறுதியாக 47949.42ல் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிப்டி இன்றைய இழப்பு 258.40 புள்ளிகள் ஆகும்.சதவீத அடிப்படையில் நிப்ட்டி குறியீட்டு நின்று 1.7 சதவீத புள்ளிகளை இழந்தது. இன்று இறுதியாக நிலைபெற்ற புள்ளிகள் அளவு 14359.45 ஆகும். 

சென்செக்ஸ் குறியீட்டெண் மதிப்பீடுக்கு அடிப்படையாக உள்ள 30 கம்பெனிகளில் பவர்கிரிட் இன்று உயர்ந்த பட்ச அளவு இழப்பை சந்தித்தது அதன் இன்றைய இழப்பு அதன் பங்கு விலையில் 4 சதவீதம் ஆகும் அதைத்தொடர்ந்து ஓஎன்ஜிசி, இண்டஸ் இந்த் வங்கி, கோடக் பேங்க், எல்என்டி, ஆசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களும் இழப்பை சந்தித்தன. இன்றைய இழப்பிலும் சென்செக்ஸ் இத்தொகுப்பிலுள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகமும் இன்ஃபோசிஸ் பங்குகளும் லாபம் சம்பாதித்தது குறிப்பிடத்தகுந்தது.

ரூபாய் மதிப்பு சரிவு

கடந்த வெள்ளிக்கிழமையன்று நாணயமாற்று சந்தையின் வர்த்தக இறுதியில் ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மாற்று மதிப்பு 74.35 ஆக இருந்தது.ஆனால் திங்கட்கிழமை காலை நாணயமாற்று சந்தை துவங்கிய பொழுது ரூபாயின் மதிப்பு 74.77 ஆக சரிந்தது. ஆனால் வர்த்தகம் தொடரும் பொழுது இந்த இழப்பு இன்னும் அதிகரித்தது 52 பைசாக்கள் குறைந்து 74 ரூபாய் 87 பைசாவாக வீழ்ச்சியடைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir ProductsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory