» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்றுமதிக்குத் தடை - அரசு உத்தரவு

சனி 17, ஏப்ரல் 2021 5:17:49 PM (IST)

கோவாவில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றுமதி செய்வதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக மாநில சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே கூறுகையில், கோவாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைப் பார்க்கும்போது, ​​ஆக்ஸிஜனின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக தடை செய்துள்ளது. மேலும், அனைத்து தொழில்துறை ஆக்ஸிஜன் தேவைகளும் கோவா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் கரோனா மருத்துவமனைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் கரோனா மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு உணவு வழங்குதலைக் கையாளும் வகையில் மாநில அரசு தனியார் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது என்றார்.  நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி 927 பேருக்குத் தொற்று பாதித்துள்ளது. மொத்தம் 65,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 868 தொற்று காரணமாக உயிரிழந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products
Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory