» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:45:27 PM (IST)
கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், மார்ச் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் எந்தவித தளர்வுகள் இன்றி கடுமையான வகையில் பின்பற்றப்பட்டன. அதன்பின் பொருளாதார முன்னேற்றம், மக்கள் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஓரளவிற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு, மாதந்தோறும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ம் தேதி வரை அமலில் இருக்கிறது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும், கண்காணிப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கரோனா தடுப்பூசி இலக்கை விரைவுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரோனா 2வது அலை தீவிரம்: இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவு : ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:45:37 PM (IST)

கரோனா இரண்டாம் அலை பரவுவதற்கு நரேந்திர மோடியே காரணம் : மம்தா குற்றச்சாட்டு
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:37:04 PM (IST)

கரோனா 2வது அலை தீவிரம்: டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல் படுத்த கேஜரிவால் உத்தரவு
திங்கள் 19, ஏப்ரல் 2021 4:23:06 PM (IST)

இந்தியாவில் ஒரேநாளில் 2,61,500 பேருக்கு தொற்று: புதிய உச்சத்தை தொட்டது கரோனா பாதிப்பு!
ஞாயிறு 18, ஏப்ரல் 2021 8:17:28 PM (IST)

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்: ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு
சனி 17, ஏப்ரல் 2021 5:50:54 PM (IST)

கோவாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்றுமதிக்குத் தடை - அரசு உத்தரவு
சனி 17, ஏப்ரல் 2021 5:17:49 PM (IST)
