» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன் 24, பிப்ரவரி 2021 4:59:08 PM (IST)

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்தார். புதுச்சேரியில், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்திருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அடுத்தடுத்த பதவி ராஜிநாமாவைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து, துணைநிலை ஆளுநரிடம் முதலமைச்சர் நாராயணசாமி தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை, இதனால், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory