» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விவசாய முறையை அழிப்பதற்காக வேளான் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

திங்கள் 22, பிப்ரவரி 2021 5:16:06 PM (IST)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளான் சட்டங்கள் இந்தியாவில் விவசாய முறையை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, முட்டில் பகுதியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது. ஆனால் மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பாப் நட்சத்திரங்கள் நம்மிடம் உள்ளனர், ஆனால் இந்திய அரசு அக்கறை காட்டவில்லை.

தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கட்டாயப்படுத்தப்படாவிட்டால் இந்த 3 புதிய சட்டங்களை அவர்கள் திரும்பப் பெறப்போவதில்லை. இந்த 3 சட்டங்கள் இந்தியாவில் விவசாய முறையை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. பாரத மாதாவுக்கு சொந்தமான ஒரே தொழில் விவசாயம். மற்ற ஒவ்வொரு வணிகமும் மற்றவர்களுக்கு சொந்தமானது. ஒரு சிலர் விவசாயத்தை சொந்தமாக்க விரும்புகிறார்கள். 2-3 பேர் இந்திய விவசாயத்தை சொந்தமாக வைத்திருக்கவும் கட்டுப்படுத்தவும் இந்த 3 சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தில் உள்ள இரண்டு பேர் அரசாங்கத்திற்கு வெளியே இரண்டு நபர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Thalir ProductsNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory