» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை: வாக்குப்பதிவு அதிகரிப்பு குறித்து பாஜக வரவேற்பு!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:44:05 AM (IST)

நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்குகள் அதிக அளவில் பதிவாகி இருப்பது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வெகு நேர்த்தியாக செயல்படுத்தியதன் காரணமாகவே இந்த சாதனை சாத்தியமானது என்றும் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநில தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் புதுவையில் 91.2%, அசாமில் 85.6%, கேரளாவில் 78.2% வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி. சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை (SIR) வெகு நேர்த்தியாக செயல்படுத்தியதன் காரணமாகவே இந்த சாதனை சாத்தியமானது. 

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்த வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாத இறந்து போனவர்கள், முகவரி மாறியவர்கள், இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் என பல்வேறு குழப்பங்களால் ஒவ்வொரு தொகுதியிலும், மாநிலங்களிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, வாக்குப்பதிவு சதவிகிதம் குறைவாக காண்பிக்கப்பட்டு, மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகள் உண்மை நிலையை உணர்த்தியதோடு, மக்களிடம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இந்த சீர்திருத்தத்தை, உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்ளவேண்டிய கடமையும், பொறுப்பும் அனைத்து கட்சியினருக்கும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory