» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
கடலுக்குள் கருணாநிதி நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!
செவ்வாய் 31, ஜனவரி 2023 4:16:47 PM (IST)
மெரினாவில் கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னத்தை வைத்தால் உடைப்பேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அதைப் பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. பின்னா், தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியம் என தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த ஆணையத்தின் சாா்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று, மெரினாவில் பேனா சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் சீமான் வழங்கினார். அவரது பேச்சுக்கு கூட்டத்தில் எதிர்ப்பு எழுந்ததால், கூட்டத்திலிருந்து வெளியேறி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மெரினாவில் உள்ள கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாற்றுக் கருத்து சொன்னால் கூச்சல், குழப்பம் செய்கிறார்கள்.
நினைவுச் சின்னம் வைக்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் கடலுக்குள் வைக்கக் கூடாது. கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னத்தை வைத்தால், மீனவர்களுக்கும் பவளப்பாறைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். அரசுப் பள்ளிகளை சீரமைக்க தமிழக அரசிடம் பணமில்லை, ஆனால் பேனா சின்னம் அமைக்க நிதியிருக்கிறதா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
மக்கள் கருத்து
ALLELUYAFeb 5, 2023 - 02:47:29 PM | Posted IP 162.1*****
இவன் திமுகவை விட டுபாக்கூர் உபிஸ் . பொறுத்திருந்து பாருங்கள் இவனே பேனா சிலை வைப்பதில் தவறில்லை என்று சொல்லுவான்....
JOSEPHFeb 3, 2023 - 01:51:01 PM | Posted IP 162.1*****
பேனா சிலைய பற்றி மக்கள்கிட்ட கருத்துகேட்கும்போது,
ஒரு அக்கா சொன்னாங்க பாருங்க ஒரு கருத்து.....
சீமான் அத ஒடைப்பேன்னு சொல்றாரு, அதப்பத்தி நீங்க என்ன நெனைக்குறீங்க?....
அவனுக்கு நல்ல ரத்தம் ஓடுது...
அதனால அப்டி சொல்றான்....
அடேய் அல்லக்கைகளா.....
1000 செருப்படிக்கு சமம்டா....
TAMILARKALFeb 2, 2023 - 02:32:52 PM | Posted IP 162.1*****
செபாஸ்டியன் சீமானுக்கு சினிமா போல கோமாளித்தனமாக பேசியே அரசியல் என்று நாடக கம்பெனி நடத்துகிறான். பேனா சிலை வைக்க மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் இவன் மற்ற நிகழ்வுகளை திசை திருப்ப இந்த பல்லவியை பாடுகிறான் . முன்பு உதயநிதி அமைச்சர் ஆனவுடன் குடும்ப ஆட்சி என்று மக்களை திசை திருப்பினான். வெகு விரைவில் பல்டி அடித்து சிலை வைப்பது தவறு இல்லை என்று சொல்லுவான்.
MASSFeb 1, 2023 - 03:43:01 PM | Posted IP 162.1*****
super super
KARNARAJ RAMANATHANJan 31, 2023 - 08:04:41 PM | Posted IP 162.1*****
Congrats and Thanks to seeman to represent our thoughts bravely on this activity spoiling Marina beach. Let them put whatever they want in arivalayam/any dmk party or family's property.
டேய்Jan 31, 2023 - 06:05:33 PM | Posted IP 162.1*****
ஆமை
என்னதுJan 31, 2023 - 05:41:21 PM | Posted IP 162.1*****
சினிமா திரைக்கதை வசனம் கவிதை அடுத்த கவிஞர் புத்தகத்தில் எடுத்து திருட்டுத்தனமா எழுதினது அதே பேணா தானே..
நாட்டுக்குJan 31, 2023 - 05:39:33 PM | Posted IP 162.1*****
பேனா சிலை தேவை இல்லை. குடும்ப ஆட்சிக்கு அறிவு இல்லை.
ஓட்டு போட்ட முட்டாள்Jan 31, 2023 - 05:38:39 PM | Posted IP 162.1*****
திராவிட ஆட்சியால் மெரினா பீச் எல்லாம் திமுக குடும்ப கல்லறையாக மாறி நாறி வருகிறது.
தமிழ்ச்செல்வன்Jan 31, 2023 - 05:03:53 PM | Posted IP 162.1*****
கிட்ட தட்ட திமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் போல சங்கமித்த கூட்டத்தில் நுழைந்து நேருக்கு நேரா ஒத்த ஆளா எங்கள மீறி பேனா சிலை நிறுவினால் உடைப்பேன்னு உபிஸ் நெஞ்சுல ஈட்டி இறக்கிறுக்காரு சீமான்....
அரசியல் களம் இப்படி இருக்கும்னு கனவுல கூட உபிஸ் நெனச்சுருக்க மாட்டாங்க...
மேலும் தொடரும் செய்திகள்

திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை
வியாழன் 16, மார்ச் 2023 5:31:40 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
செவ்வாய் 14, மார்ச் 2023 10:26:59 AM (IST)

இந்தியா பற்றி சில ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன : அனுராக் தாக்குர் கண்டனம்
சனி 11, மார்ச் 2023 10:04:47 AM (IST)

மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
வியாழன் 9, மார்ச் 2023 12:03:06 PM (IST)

எடப்பாடி என்னும் நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை: ஓபிஎஸ் அறிக்கை
வெள்ளி 3, மார்ச் 2023 4:49:39 PM (IST)

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: பிரதமரிடம் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, பிப்ரவரி 2023 5:03:10 PM (IST)

sankarFeb 6, 2023 - 05:15:32 PM | Posted IP 162.1*****