» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

அ.தி.மு.க.,தான் எதிர்க்கட்சி; பா.ஜ.க., காக்கா கூட்டம் : செல்லூர் ராஜூ காட்டம்

சனி 4, ஜூன் 2022 4:35:41 PM (IST)

பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடுவது கொள்கை கூட்டம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: அ.தி.மு.க என்றும் தமிழக மக்களுக்காக சேவை செய்கின்ற இயக்கமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதான இயக்கம். 

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இளைஞராக இருக்கிறார். அவரும் அவரது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு வகைகளில் அரசியல் செய்கிறார். தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பாக பணியாற்றினார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அதுபோல எல். முருகன் பாரதிய ஜனதா தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை நடத்தினார். 

இதையடுத்து மத்திய அமைச்சர் பதவி அவருக்கு கிடைத்தது. அதுபோல பதவிக்காக தற்போதைய தலைவர் அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ன செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக அ.தி.மு.க. செய்து வருகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வினரின் ஊழல்களை அவ்வப்போது வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. அதனை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. 

நாங்கள் தி.மு.க.வினரின் குறைகளை அமைதியான முறையில் தெரிவித்து வருகிறோம். அ.தி.மு.க. எப்போதும் மக்கள் விரும்பும் இயக்கமாகும். ஆனால் பாரதிய ஜனதாவின் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள். அதற்காக பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது. இறை எங்கே இருக்கிறதோ அங்கே அதிகமாக காக்கா கூடும். பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம். காலை நாகூரில் அதிகளவில் புறாக்கள் இருக்கும்.சிறிது நேரத்தில் அந்தப் புறாக்கள் அனைத்தும் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடுவது கொள்கை கூட்டம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

NANBANJun 18, 2022 - 02:42:45 PM | Posted IP 162.1*****

முதலில் உங்கள் கட்சிக்குள் உள்ள பிரச்சினையை தீர்த்து விட்டு பிறகு பிஜேபி ஐ குறை சொல்லுங்கள். நீங்கள் உங்கள் கட்சிக்குள் இப்படி சண்டை போட்டால் திமுக உங்கள் கட்சிக்குள் வந்துவிடும்.

MGR VISUVASIJun 10, 2022 - 03:17:06 PM | Posted IP 162.1*****

பிஜேபி ஆதரவில் (BEFORE) ஆட்சிக்கு வந்துவிட்டு , இப்போது திமுகவை திருப்திப்படுத்த பிஜேபி ஐ குறைகூறுகிறார். ADMK தோல்விக்கு உங்களைப்போன்ற ஸ்லீப்பர் செல்களும் காரணம்.

SOORIYANJun 8, 2022 - 04:51:21 PM | Posted IP 162.1*****

தெர்மோகோல் விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு.திமுக அமைச்சர் சொன்னதுபோல உண்மையிலே இவர் மதுரைக்கு மட்டுமல்ல தமிநாட்டிற்கே பொழுது போக்குதான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory