» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி: ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்!

சனி 7, மே 2022 5:33:59 PM (IST)

"திமுகவின் ஓராண்டு ஆட்சி, தமிழக மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் "மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். மேலும், தேர்தலின் போது, திமுக கொடுத்த பொய்யான, போலியான, நிறைவேற்ற முடியாத, சாத்தியமற்ற வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்ததன் விளைவாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி துரதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டது. மக்கள் இன்பங்களை மறந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகிறார்கள்.

திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து, மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி அமைந்து ஓராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. இதேபோல, 30 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டாகியும் திமுக அரசு இதுகுறித்து வாய் திறக்கவில்லை.  மகளிர் எதிர்பார்த்த முக்கியமான வாக்குறுதியான மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படாததால், மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.  தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும் என்பதற்கேற்ப அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory