» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
பெரியார் நினைவு சமத்துவபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
செவ்வாய் 5, ஏப்ரல் 2022 11:15:55 AM (IST)

கொழுவாரி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது சமத்துவபுரம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு சமத்துவபுரம் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட கொழுவாரி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. ரூ.2.88 கோடி மதிப்பில் இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பெரியார் நினைவு சமத்துவபுரத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். அதன் பின்னர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் உருவ சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள், புதியதாக உருவாக்கப்பட்ட பசுமை தோட்டங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். அங்கிருந்தவர்களிடம் சிறிது நேரம் உரையாடினார். வீட்டில் உள்ள வசதிகள் பற்றி கேட்டு அறிந்தார்.
இதனை தொடர்ந்து சமத்துவபுர வளாகத்தில் ரூ.2.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.12 லட்சம் செலவில் நூலக கட்டிடம் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.42 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10,722 பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் சமத்துவபுரம் பயனாளிகளுக்கு வீட்டின் சாவியையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுதவிர இந்த விழாவில் ரூ.24 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகள், புதிய கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார்.
இந்த விழாக்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், எம்.பி.க்கள் ரவிக்குமார், விஷ்ணுபிரசாத், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க் கள் புகழேந்தி, லட்சுமணன், மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பம் கிராமத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்துக்கு சென்றார். அங்கு ரூ.500 கோடி மதிப்பில் லோட்டஸ் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் செய்திருந்தனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துரோகத்தின் அடையாளம்: ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் கடும் விமர்சனம்!
திங்கள் 27, ஜூன் 2022 4:56:20 PM (IST)

தமிழகத்தில் நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? சிங்களர்களுக்கான ஆட்சியா? – சீமான் கண்டனம்
சனி 25, ஜூன் 2022 12:33:15 PM (IST)

அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணம் : ஜெயக்குமார்
திங்கள் 20, ஜூன் 2022 12:09:39 PM (IST)

அக்னி பாதை திட்டம் ராணுவத்தின் மரியாதையை குறைத்துவிடும்: வைகோ அறிக்கை
வெள்ளி 17, ஜூன் 2022 5:30:16 PM (IST)

அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்: கோஷ்டி பூசல் உச்சகட்டம்!
புதன் 15, ஜூன் 2022 11:59:44 AM (IST)

மேகதாது அணை விவகாரம் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
திங்கள் 13, ஜூன் 2022 5:11:50 PM (IST)
