» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!

செவ்வாய் 8, மார்ச் 2022 12:10:27 PM (IST)

நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வரை, தமிழக சட்டப் பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்டு, இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. 

ஆனால், அந்த சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்று வரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் முதலில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்ட முன்வரைவை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்காவது அதிகபட்சமாக ஒரு வாரம் தேவைப்படும். இப்போது அதே சட்ட முன்வரைவு தான் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டிருக்கிறது என்பதால், அதில் ஆய்வு செய்யவோ, சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கவோ எதுவும் இல்லை.

ஒரு சட்ட முன்வரைவை சட்டப்பேரவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர ஆளுனருக்கு வேறு வழியில்லை. அதனால், தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு கண்களை மூடிக் கொண்டு ஒப்புதல் அளித்து கையெழுத்து போடுவது தான் ஆளுனருக்கு உள்ள ஒரே வாய்ப்பு ஆகும். ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு சட்ட முன்வரைவு மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டால், அது பற்றி எந்த முடிவும் எடுக்காமல் தம்மிடமே வைத்துக் கொள்ள ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்று அரசியலமைப்பு சட்டம் 200வது பிரிவில் கூறப்பட்டுள்ளது.

இதை உணர்ந்து நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நீட் தேர்வு மாணவர்கொல்லி தேர்வு என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். கடந்த இரு ஆண்டுகளாக, நீட் தேர்வு அச்சம் மற்றும் தோல்வியால் ஒவ்வொரு ஆண்டும் 10 பேருக்கும் மேலாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த ஆண்டும் நீட் தற்கொலைகள் தொடர் கதையாகிவிடக்கூடாது.

அதனால், தமிழக ஆளுனர் உடனடியாக நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைக்காவிட்டால், ஆளுனரை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து, இதற்காக வலியுறுத்த வேண்டும். அதன்பின் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும். வரும் கல்வியாவிண்டுக்கு முன்பாக தமிழகத்தில் இருந்து நீட் விலக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து

TREEMar 23, 2022 - 11:16:17 AM | Posted IP 162.1*****

YES CORRECT CONGRESS ALSO..DRAMA COMPANY..

TREE அவர்களேMar 18, 2022 - 10:26:06 AM | Posted IP 173.2*****

அது திமூக நாடக கம்பெனி தான். கூத்தாடி பாலடாயில் உதயநிதி செங்கல் திருடனிடம் சீக்ரெட் இருக்காமே ஐடியா இல்லாத அரசியல்வாதிகள்.

TREEMar 17, 2022 - 01:58:18 PM | Posted IP 162.1*****

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ....NEET விலக்கு எப்படி ஐயா சாத்தியமாகும்...நீங்கள் படித்தவர்தானே? எப்படி மக்களை ஏமாற்றலாம்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory