» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழ்நாட்டிற்கு முதல் இடம் கிடைக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

வியாழன் 27, ஜனவரி 2022 5:40:00 PM (IST)

முதலமைச்சர் நம்பர் 1 என்று சொல்வதை விட, தமிழ்நாட்டிற்கு நம்பர் 1 இடம் என்று சொல்லும் நிலை வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவனின் இல்லத் திருமண விழாவில் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்களை ஒப்பீட்டு சொல்லுகிற போது, அந்தந்த மாநிலத்தில் இருக்கும் முதலமைச்சர்களுக்கு எல்லாம் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்ட நேரத்தில், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் முதலிடம் என்ற செய்தி. அதில் எனக்கு ஒரு பெருமைதான், சிறப்புதான், அதை நான் மறுக்கவில்லை. 

முதலமைச்சர் நம்பர் 1 என்று சொல்வதை விட, தமிழ்நாட்டிற்கு நம்பர் 1 இடம் என்று சொல்லும் நிலை வர வேண்டும். எனவே அந்த எண்ணத்தோடுதான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திருமண நிகழ்ச்சியை நடத்துகிற நேரத்தில், தேர்தல் தேதி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அப்படி நடைபெறுகிற தேர்தலில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மகளிருக்கு வழங்கப்பட வேண்டிய நிலையில் அதை தேர்தலை நடத்துகிறோம்.

அது தேர்தலில் மட்டுமல்ல, அது குடும்பத்திலும், இங்கு மணவிழா காணும் மணமக்களும் வாழ்க்கையில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு நிச்சயமாக இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அதில் இருக்க வேண்டுமென்று மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொண்டு, வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், "வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” நீங்கள் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி டி.கே.எஸ். இளங்கோவனின் தொண்டு மேலும் இயக்கத்திற்கு வலு சேர்க்கும் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory