» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் பிப்.19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதன் 26, ஜனவரி 2022 7:00:35 PM (IST)

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார். அதன்படி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்படும் எனவும் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத்தாக்கல் பிப்ரவரி 4ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் மூலம் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சிகள் உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory