» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தன்னம்பிக்கையை வளர்க்கும் பட்ஜெட்டாக உள்ளது: பிரதமர் மோடி

திங்கள் 1, பிப்ரவரி 2021 5:37:10 PM (IST)

"இந்தியாவின் நம்பிக்கையை காட்டுவதுடன், உலகில் தன்னம்பிக்கையை வளர்க்கும் பட்ஜெட்டாக உள்ளது" என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

கரோனா சூழநிலைகளுக்கு மத்தியில் 2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்  அதில் சுகாதாரத்துறைக்கு 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, பிரதமரின் சுயசார்பு ஆரோக்கியத் திட்டம் 64,180 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.

நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 1.41 லட்சம் கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய வாகனங்கள் திரும்பப்பெறும் கொள்கை அறிமுகம், காப்பீட்டுத்துறையில் அந்திய நேரடி முதலீடு 49-ல் இருந்து 74  சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது போன்றவை பட்ஜெட்டில் இடம் பிடித்திருந்தன.

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: முன்னெப்போதும் இல்லாத கடுமையாக சூழ்நிலைகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுவதுடன், உலகில் தன்னம்பிக்கையை வளர்க்கும் பட்ஜெட்டாக உள்ளது. 

பட்ஜெட்டில் தன்னம்பிக்கை பற்றிய பார்வை உள்ளது, சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியது. விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. இதற்காக பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகள் எளிதாக கடன் பெற முடியும். வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் உதவியுடன் ஏபிஎம்சி சந்தைகளை வலுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நமது இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், உள்கட்டமைப்பிற்கான புதிய பிராந்தியங்களை உருவாக்குதல், தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறுதல் உள்ளிட்ட புதிய சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான அணுகுமுறையை இந்த பட்ஜெட்டில் எடுத்துள்ளோம். மொத்தத்தில் சிறப்பான மாற்றங்களை கொண்டு வந்து அனைவருக்கும் ஏற்றமளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிFeb 3, 2021 - 09:41:45 AM | Posted IP 162.1*****

யாருக்கு?

Middle classFeb 2, 2021 - 12:06:32 PM | Posted IP 108.1*****

Useless budget for the poor.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesThalir Products


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory