» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக மக்கள் தேர்வு செய்யவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

புதன் 27, ஜனவரி 2021 5:46:15 PM (IST)

"எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தமிழக மக்கள் தேர்வு செய்யவில்லை" என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தருமபுரியில் இன்று செய்தியாளர்களை சநதித்த அவர் கூறியதாவது, சசிகலா குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எனது கருத்து. ஒரு பெண்ணாக அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். 100 நாள்களில் மக்களின் பிரச்னை தீரும் என்று கூறும் ஸ்டாலின், அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்? எனவே, வாக்குறுதி யார் வேண்டுமானாலும் அளிக்கலாம், அதை நிறைவேற்றுவது முக்கியம்.

கமல் ஹாசனுக்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு உள்ளது என்பது இந்தத் தேர்தலில் தெரிய வரும். அதிமுக கூட்டணியில் எற்கெனவே கொடுக்கப்பட்ட 41 தொகுதிகளை இந்தத் தேர்தலிலும் எதிர்பார்க்கிறோம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக மக்களால் தேர்தெடுக்கப்படவில்லை. அவர் அதிமுகவினரால் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டார் என்று கூறினார். 2021 தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணியில் இருக்கும் தேமுதிக தரப்பில் பிரேமலதா இவ்வாறு கூறியுள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

ஆசீர். விJan 28, 2021 - 10:41:30 AM | Posted IP 173.2*****

100% True

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir ProductsBlack Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory