» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

ரசிகர்கள் விரும்பிய கட்சியில் இணைந்து செயல்படலாம் : ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

திங்கள் 18, ஜனவரி 2021 12:35:52 PM (IST)

ரஜினி ரசிகர்கள் தான் விரும்பிய கட்சியில் இணைந்து செயல்படலாம், என மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி அரசியலுக்கு வருவேன் என உறுதியாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் 31-ம் தேதி கட்சிப்பெயர் உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் உடல்நலப்பிரச்சினை காரணமாக அரசியல் முடிவை கைவிடுவதாக டிச.27 அன்று அறிவித்தார். இதையடுத்து அவர் வரவில்லை என்பதை உறுதியாக கடந்த ஜன.11 அன்று தெரிவித்தார். 

இந்நிலையில் ஆங்காங்கே ரஜினி மக்கள் மன்றத்தினர் அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படும் முடிவை எடுத்தனர். இதிலும் குழப்பம் நீடித்தது. அதை தீர்க்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி சுதாகர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: "ரஜினி மக்கள் மன்றத்துக் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்தக்கட்சியில் வேண்டுமானாலும் இணைந்துக்கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத்தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது”. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJan 18, 2021 - 12:58:57 PM | Posted IP 108.1*****

தனது சொந்த மன்றத்து ரசிகர்களை தானமாக தந்து உதவிய வள்ளலுக்கு நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products

Nalam PasumaiyagamBlack Forest Cakes
Thoothukudi Business Directory