» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஓபிஎஸ்!

புதன் 7, அக்டோபர் 2020 10:23:27 AM (IST)எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் 2021 சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதனை துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் புலிவேஷம் கட்டி ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு கடந்த 10 நாட்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மாறி மாறி அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். காலையில் தொடங்கி இரவு வரையும் ஆலோசனை நடைபெற்றது. விடிய விடிய நடந்த ஆலோசனை அதிகாலையில் முடிவுக்கு வந்தது. அதிமுக முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியான நிலையில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து

MAKKALOct 7, 2020 - 03:49:35 PM | Posted IP 162.1*****

Good choice...Mr.Edappadi Palanisamy is good administrator in ADMK amoung others.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products


Black Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory