» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

விவசாய மசோதாக்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்புகிறார்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வெள்ளி 18, செப்டம்பர் 2020 4:39:22 PM (IST)

இந்திய விவசாயிகளை தவறான பாதையில் நடத்திச் செல்ல சிலர் முயற்சி செய்கிறார்கள். விவசாயிகள் அவர்களை நம்பக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பீகார் மாநிலத்தில் ரூபாய் 2500 கோடி மதிப்புள்ள 13 ரயில்வே திட்டங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்து பேசினார். அவர் தனது துவக்க உரையில் விவசாயிகளுக்காக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மூன்று மசோதாக்கள் குறித்து குறிப்பிட்டு பேசினார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மூன்று விவசாயம் தொடர்பான மசோதாக்கள் விஷயத்தில் இந்திய விவசாயிகளை தவறாக வழிநடத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். 

தவறான தகவல்கள் இன்று நாட்டில் சிலரால் பரப்பப்படுகின்றன. அவர்கள் விவசாய விளைபொருள்களுக்கு  நியாயமான விலை விவசாயிகளுக்கு கிடைக்காது என்று கூறுகிறார்கள். ஆனால் பாஜக அரசு விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலையில் பெற்றுத் தருவதற்கு உறுதி பூண்டுள்ளது. இனி இந்திய விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருள்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எந்த தடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாமல் விற்பனை செய்யலாம்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மசோதாக்கள் விவசாயிகளுக்கு இடைத்தரகர்களிடம் இருந்து சுதந்திரம் வழங்குகிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை விற்பனை செய்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் இனிமேல் கிடைக்கும். மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ள மசோதாக்கள் விவசாயிகள் பாதுகாப்பு கவசமாக செயல்படும்.

ஆனால் பலர் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாக்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் . அவர்கள் போராட்டத்துக்காகவே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தியாவின் விவசாயிகள் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய விவசாயிகளுக்கு யார் தரகர்கள் என்பது நன்றாக தெரியும். அவர்கள் வானளாவிய சாதனைகள் என்று  குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி பட்டியல் இடுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் அந்த சாதனைகளை நிறைவேற்றியது இல்லை. விவசாயிகள் நலனுக்காக அவர்கள் பாடுபட்டதும் இல்லை. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அவர்களுக்காக  செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் அகற்றுவதற்காக தேசிய ஜனநாயக முன்னணி அரசு பாடுபட்டு வருகிறது . பிரதம மந்திரியின் விவசாயிகள் உதவி திட்டத்தின் மூலம் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ. 1 இலட்சம் கோடி நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். விவசாயிகள் அவர்கள் சொல்வதை நம்பக்கூடாது. சிலர் விவசாயிகளிடத்தில் பொய் சொல்கிறார்கள். அவர்கள் விவசாய மண்டிகளில் உள்ள தரகர்களின் ஆதரவாளர்கள்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாக்கள் விவசாய சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது. அவை விவசாயிகள் தங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்வதற்கு புதிய வழிகளைத் திறந்து விடுகின்றன. இந்த சீர்திருத்தங்கள் காரணமாக விவசாயத்திற்கு  நவீன தொழில்நுட்பம் வந்து சேரும். நம்முடைய விவசாயிகள் கூடுதல் அதிகாரம் உடையவர்களாக பயன்பெறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பீகார் மாநிலத்துக்கான திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நான்காவது முறையாகத் துவக்கி வைத்துள்ளார் அல்லது சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியுள்ளார். வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத் தகுந்தது.


மக்கள் கருத்து

saamySep 24, 2020 - 05:34:45 PM | Posted IP 173.2*****

the political liars in TN are very busy in spreading false news and keeping to alive a anti modi sentiment, but surely this wont work in the coming elections.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products


Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory