» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

கொரோனா மரணங்களை மறைக்கும் கொடூர ஆட்சி : திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

வியாழன் 23, ஜூலை 2020 4:48:29 PM (IST)

அதிமுக அரசு கரோனாவால் ஏற்பட்ட மரணங்களை மறைத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 5,849 பேருக்கு கரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 89,561பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தினமும் கரோனா உறுதியாகும் விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதே போல சென்னையில் எவ்வளவு உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

இதற்கிடையில் தமிழக அரசு கரோனா விவரங்களையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும் மறைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்தார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளி வாயிலாக பேசிய மு.க ஸ்டாலின், கரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கரோனா மரணத்தை போல கரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

ஆனால் உண்மைJul 26, 2020 - 08:02:58 AM | Posted IP 162.1*****

ஈழ மக்களை மறைக்கும் கொடூர ஆட்சிதானே கடவுளுக்கு எல்லாம் தெரியும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory