» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024ம் ஆண்டிற்குள் வெளியேற்றம்: அமித்ஷா உறுதி

வியாழன் 17, அக்டோபர் 2019 11:23:45 AM (IST)

இந்தியாவில்  சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டிற்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டிற்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் வரும் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  

அங்குள்ள பரிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறியதாவது:-   2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனுமதியின்றி இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள்" என்றார்.  மேலும்,  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய அமிஷ் ஷா, அதனை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா, இல்லையா என்பதை ராகுல்காந்தி தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Anbu Communications

Black Forest Cakes





Thoothukudi Business Directory