» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலத்தில் அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 12:41:03 PM (IST)

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலத்தில் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று (ஆக.20) 2வது நாளாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: "சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் பட்டா வழங்கப்படும். அதேபோல் பட்டா மாறுதலும் செய்து கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், பல பேர் நீண்ட காலமாக வசித்து வந்த இடத்திற்கு வீட்டு மனைப் பட்டா இதுவரை வாங்காமல் இருந்திருப்பீர்கள். அந்த வீட்டு மனைப் பட்டா விண்ணப்பித்த தகுதி வாய்ந்தவர்கள் அனைவருக்கும், வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.

வீட்டு மனைப் பட்டா இருந்து வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் வாயிலாக வீடு கட்டித் தரப்படும். பேரூராட்சிகளிலும் இதேபோல் நிறைவேற்றப்படும். பேரூராட்சிகளில் அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தரப்படும். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதுதான் எங்களின் லட்சியம். அப்போதுதான், தமிழகத்தில் குடிசைகளின்றி அடுக்குமாடி வீடுகளாக காட்சியளிக்கும்.

நீரை சேகரிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என எண்ணி செயல்பட வேண்டும். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய இருக்கிறது. 1,200 ஏக்கரில் அதனை நடைமுறைப்படுத்த திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இந்த கால்நடைப் பூங்கா வரும்போது, கால்நடை ஆராய்ச்சி மையமும் உருவாக்கப்படும். கால்நடை மருத்துவக் கல்லூரி ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. ஆராய்ச்சி மையத்தில், மீன் வளர்ப்பு, கலப்பின மாடுகள் உருவாக்கம், ஆடுகள் வளர்ப்பு, கோழிகள் வளர்ப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும். கோழிகள், ஆடுகள், மாடுகள் மக்களுக்கு வழங்கப்படும். கால்நடைப் பூங்கா அமைந்தால் இந்தப் பகுதி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்", இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Anbu Communications


CSC Computer Education
Thoothukudi Business Directory