» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து: பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்!!

திங்கள் 5, ஆகஸ்ட் 2019 12:16:01 PM (IST)

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். பின்னர், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் 4 மசோதாக்களை அமித் ஷா அறிமுகப்படுத்தினார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்ய வகை செய்யும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் சபாநாயகர் வெங்கையா நாயுடுவின் முயற்சி பலனளிக்காத நிலையில் அவை சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில்,  சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவின் நகலும் ஊடகங்களில் அறிவிக்கையாக வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து

சேகர்Aug 8, 2019 - 12:52:13 PM | Posted IP 108.1*****

காஷ்மீர் மாநிலம் வீட்டு சிறையிலிருந்து விடுதலை ஆகி விட்டது

குமார்Aug 5, 2019 - 01:25:11 PM | Posted IP 173.2*****

மகிழ்ச்சியான செய்தி.... ஜெய் ஹிந்த்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest CakesThoothukudi Business Directory