» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி திமுக வெற்றி: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு!!

சனி 20, ஜூலை 2019 5:23:04 PM (IST)

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கும்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் பொதுத்துறை, வீட்டு வசதி உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் 22 சட்டமன்ற தொகுதிகளில் 13 தொகுதிகளில் மக்கள் திமுகவுக்கு வெற்றியை கொடுத்துள்ளதாகவும், ஆனால் மிட்டாய் காண்பித்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டார்கள் என கூறி வாக்களித்த மக்களை முதலமைச்சர் சொச்சைப்படுத்தி விட்டார் என்றார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், வாக்குறுதி என்ற மிட்டாயை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்று தான் சொன்னதாக விளக்கம் அளித்தார். திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற முடியாதவை  ஆனால் அதிமுக எதை செய்ய முடியுமோ அதை வாக்குறுதிகளாக கொடுத்து வாக்கு சேகரித்ததாகவும் கூறினார். பின்னர் பேசிய ஸ்டாலின், 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என கருதி தான் வாக்குறுதிகள் அளித்ததாக தெரிவித்தார்.

விரைவில் மாற்றம் வரும், மேலே இருக்க சக்கரம் கீழே வரும் கீழே இருக்கும் சக்கரம் மேலே போகும் அவ்வாறு வரும்பட்சத்தில் அனைத்து வாக்குறுதிகளையும் திமுக நிச்சயம் நிறைவேற்றும் என கூறினார். பின்னர் பேசிய முதலமைச்சர் ஆர்.கே.நகரில் டெபாசிட் கூட வாங்க முடியாத நீங்கள் இப்போது எப்படி வெற்றி பெற்றீர்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து நீங்கள் வெற்றி பெற்றது தான் உண்மை. வருகின்ற 2021ல் அதிமுக அரசு தான் அமையும்  என கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


மக்கள் கருத்து

ராஜாJul 25, 2019 - 02:45:58 PM | Posted IP 162.1*****

நீங்கள் ஆர்.கே நகரில் என்ன சாதித்து விட்டீர்கள்....அதிமுகவும் தோல்வி தான் அடைந்தது ....அதிமுகவுக்கு இனி வெற்றி ஒன்று கிடையாது .....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications


CSC Computer Education




Thoothukudi Business Directory