» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்!!

புதன் 5, ஜூன் 2019 12:39:34 PM (IST)

பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என, முதல்வர் பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய மத்திய பாஜக அரசு உருவாக்கிய புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை சமீபத்தில் பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டது. மும்மொழிக் கொள்கையைப் பரிந்துரைத்துள்ள அந்த அறிக்கையில், இந்தி பேசும் மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் பிறமொழி ஒன்றைக் கற்பிக்கவும், இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்பிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், இந்தி மொழி வலிந்து திணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கொட்டையன் தெரிவித்தார். இந்நிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை கட்டாயமில்லை எனவும், அதாவது, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமில்லை என வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்துகிறேன். அப்படி செய்வது, உலகின் மிக தொன்மையான மொழிகளில் ஒன்றுக்கு செய்யும் சேவையாகும்", என பழனிசாமி பதிவிட்டுள்ளார். பிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக சேர்க்க வேண்டும் என்றால், அதனை மூன்றாவது மொழியாகவே சேர்க்க முடியும். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Anbu Communications


CSC Computer Education

Black Forest Cakes




Thoothukudi Business Directory