» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்: மே.23-ல் வாக்கு எண்ணிக்கை!!

செவ்வாய் 9, ஏப்ரல் 2019 5:33:43 PM (IST)

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரலாறு கண்டிராத அளவில் பல அரசியல் விநோதங்கள் நடந்து வருகிறது. முன்னெப்போதும் தமிழக அரசியல் களம் காணாத வகையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இது மினி சட்டசபை தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக அணியில் மாறுபட்ட நிலைபாடு கொண்டிருந்த 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க இதையடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்தார் சட்டப்பேரவை தலைவர்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஓசூர் தொகுதி வேட்பாளர் பாலகிருஷ்ணரெட்டி தகுதி நீக்கம் காரணமாக அந்த தொகுதியும் அறிவிக்கப்பட்டது.மொத்தம் 21 தொகுதிகள் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் காலியாக இருந்தது. இந்நிலையில் 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு இருப்பதால் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மறைவை ஒட்டி அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டு தொகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் சென்னை வந்த மத்திய தேர்தல் ஆணைய கூடுதல் ஆணையர்களை சந்தித்து அரசியல் கட்சியினர் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டுகோள் வைத்தனர்.

இந்நிலையில் காலியாக உள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 4 தொகுதிகளிலும் மே.19 இடைத்தேர்தல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 18 தொகுதிகள் எண்ணப்படும் மே.23 அன்றே எண்ணப்படும் என்பதால் வேறு வேறு நாட்களில் நடத்தப்பட்டாலும், மே.23 அன்று 22 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகிறது. ஏப்.22 அன்று வேட்புமனு தாக்கலும், ஏப்.30 அன்று வேட்பு மனு பரிசீலனையும் நடக்கிறது. மே. 19 அன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மே.23 தமிழக நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் 4 தொகுதிகளின் எண்ணிக்கையும் நடக்கிறது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education


Nalam Pasumaiyagam


Anbu Communications




Thoothukudi Business Directory