» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இந்தியாவை வளர்ந்த நாடாக மற்றுவது தான் பாஜக-வின் ஒரே இலக்கு: பிரதமர் நரேந்திர மோடி

திங்கள் 8, ஏப்ரல் 2019 5:38:12 PM (IST)

இந்தியாவை வளர்ந்த நாடாக மற்றுவது தான் பாஜக-வின் ஒரே இலக்கு. இதற்கான 75 முக்கிய வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

2019 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு சங்கல்ப பத்திரம் என்று பெயரிட்டுள்ளது. பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வருகிற 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, நாடு சுதந்திரம் அடைந்த 100-ஆவது ஆண்டு விழாவின்போது 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மற்றுவது தான் பாஜக-வின் ஒரே இலக்கு. இதற்கான 75 முக்கிய வாக்குறுதிகள் இந்த சங்கல்ப பத்திரத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்காக நாட்டு மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நாங்கள் நிச்சயம் வறுமையை ஒழிக்க போராடுவோம். முதலில் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் மக்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்வோம். 

ஏனெனில் மக்களின் மனங்களின் குரலே பாஜக-வின் தேர்தல் அறிக்கையாக இடம்பெற்றுள்ளது. இந்தியா நிச்சயம் வளரும் நாட்டில் இருந்த வளர்ந்த நாடாக மாற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தேசத்தின் வளர்ச்சி ஒன்றுபட்டதாக இருக்கும். தேசியம் தான் பாஜக-வின் தாரக மந்திரம் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Anbu Communications

Joseph Marketing

CSC Computer Education


New Shape Tailors





Thoothukudi Business Directory