» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இவ்வளவு அழகான வேட்பாளரை தவறவிடாதீர்கள்: தமிழச்சிக்கு ஆதரவாக உதயநிதி பிரச்சாரம்!!

புதன் 20, மார்ச் 2019 5:03:10 PM (IST)அழகான வேட்பாளரை பிரதிநிதியாக்கத் தவறிவிடாதீர்கள் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்காகப் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார் கவிஞரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன். அவருக்காக திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி சைதாப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தென் சென்னை வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறேன், இவ்வளவு அழகான வேட்பாளரை உங்களின் பிரதிநிதியாக அனுப்பத் தவறிவிடாதீர்கள். 

நான் அழகு என்றது அவருடைய தோற்றத்தை மட்டுமல்ல, அழகுத் தமிழ், தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்று மற்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற கொள்கை ஆகியவற்றையும் சொல்கிறேன் என்றார். இதற்கிடையே உதயநிதியின் பேச்சைக் கேட்ட தமிழச்சி தங்கபாண்டியன், சிரித்துக்கொண்டே கீழே குனிந்துகொண்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.


மக்கள் கருத்து

கேட்ச்Mar 21, 2019 - 02:43:54 PM | Posted IP 162.1*****

திண்டுக்கல் சீனிவாசன் செல்லூர் ராஜு வ போல வரலையே, இன்னும் எதிர்பாக்குறாங்க.. நல்ல பேமஸ் ஆகணும் இப்டி தான்...

தமிழன்Mar 21, 2019 - 10:36:28 AM | Posted IP 162.1*****

எல்லாம் காலக்கொடுமை...... தமிழகத்தை வாரிசு அரசியல் ஆட்டிப்படைக்குது......மக்கள் சிந்தித்தால்தான் உண்டு....தமிழகத்திற்கு வெளிச்சம் ....

அருண்Mar 21, 2019 - 10:04:08 AM | Posted IP 157.5*****

கலைஞர் பேரனாச்சே.... சும்மாவா...

சாய்Mar 20, 2019 - 06:07:06 PM | Posted IP 162.1*****

உனக்கே இது நல்ல இருக்கா - இதுல சிரிப்பு வேற

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Joseph Marketing

Anbu Communications
Thoothukudi Business Directory