» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான் மதுவிலக்கு கொண்டுவரவில்லை: ராஜேந்திர பாலாஜி

புதன் 20, மார்ச் 2019 12:33:39 PM (IST)

குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான் உடனடியாக முழு மதுவிலக்கு கொண்டுவரவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள ஆகிலாபுரத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. மது குடிப்பவர்கள் உடனே குடிப்பதை நிறுத்தினால், நரம்புத்தளர்ச்சி ஏற்படும். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். 

மது குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான், நாங்கள் உடனடியாக முழு மதுவிலக்கையும் கொண்டுவராமல் இருக்கிறோம். படிப்படியாக, மதுவிலக்கைக் கொண்டு வருகிறோம். ராஜகண்ணப்பன், வேறு ஒரு கட்சிக்கு ஆதரவு என்று போய்விட்டதால், அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. ஒரேயொரு ஓட்டுதான் இழப்பு. வேறு எந்த இழப்பும் கிடையாது. இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஒருவன்Mar 23, 2019 - 07:15:53 AM | Posted IP 162.1*****

முட்டாளெலாம் எல்லாம் அதிமுகவில் இருக்கான் .

நிஹாMar 21, 2019 - 10:37:27 AM | Posted IP 162.1*****

இவர்களுக்கு ஒட்டு போட்டவர்கள் தங்களை தாங்களே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்.

எப்படிய்யா உங்களால இதெல்ல்லாம் முடியுதுMar 20, 2019 - 06:13:46 PM | Posted IP 172.6*****

செல்லூர் ராஜுக்கு தம்பியா? அண்ணனா?

NARTHAMar 20, 2019 - 03:13:40 PM | Posted IP 162.1*****

சூப்பர் . ஐயா நீங்க ஒரு மேதை .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam PasumaiyagamAnbu Communications

Black Forest Cakes

New Shape Tailors
Thoothukudi Business Directory