» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நோட்டாவோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு 5 சீட்டா? ராஜகண்ணப்பன் ஆவேசம்

செவ்வாய் 19, மார்ச் 2019 10:20:02 AM (IST)

நோட்டாவோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு ஐந்து சீட்டா? என்று அதிமுக தலைமைக்கு  முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதாவின்  அமைச்சரவையில் பொதுப் பணித் துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை வகித்தவர் ராஜகண்ணப்பன். பின்னர் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் காங்கிரசின் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்ட அவர் 3,354 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார்.

தற்போது 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுரம் அல்லது மதுரை தொகுதியை அவர் எதிர்பாத்துக் காத்திருந்தார்.   ஆனால் அதிமுக கூட்டணியில் சிவகணகை மற்றும் ராமநாதபுரம் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதுரை தொகுதி ராஜகண்ணப்பனனுக்கு கிடைக்கக் கூடாது என்று சில அதிமுக அமைசசர்கள் லாபி செய்ததாக கூறப்படுகிறது.   எனவே சீட் கிடைக்காத அதிருப்தியில், ராஜகண்ணப்பன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தரத் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியது.   

இந்நிலையில் நோட்டாவோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு ஐந்து சீட்டா? என்று அதிமுக தலைமையை நோக்கி முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திங்கள் மாலை சந்தித்து ராஜகண்ணப்பன், திமுக கூட்டணிக்கு தனது  ஆதரவை தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுகவில் தற்போது உட்கட்சிப்பூசல் நிறைய உள்ளது. ஒரு குடும்பத்திற்காக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், இப்போது மகனுக்காக சீட் வாங்க போராடியது ஏன்?   ஓ.பன்னீர்செல்வம் தூரோகம் செய்துவிட்டார். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டனர்.

அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லோரும் தொண்டர்கள் இல்லை. திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தமிழகத்தில், நோட்டாவையே வெற்றி கொள்ள முடியாத பா.ஜனதாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? தென்மாவட்டங்களில் அவர்கள் கேட்கின்ற 4 தொகுதிகளை அப்படியே பா.ஜனதாவிற்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?அதிமுகவில் இப்போதைய தலைவர்கள் கைகளை கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். நான் திமுக கூட்டணியை ஆதரித்து மதுரையில் பிரசாரம் செய்வேன். தேவைப்பட்டால் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாகக் கூட பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Anbu Communications

New Shape Tailors

Joseph Marketing


CSC Computer Education



Black Forest Cakes



Thoothukudi Business Directory