» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தேர்தல் வந்தால்தான் திமுகவில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பது தெரியும்: அழகிரி பேட்டி

ஞாயிறு 10, ஜூன் 2018 9:49:40 PM (IST)

தேர்தல் வந்தால் எத்தனை பேர் வெளியே வருவர் என்பது தெரியும் என்று கருணாநிதியின் மகனும், முன்னாள் அமைச்சருமான அழகிரி தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் இத்தனை ஆண்டுகளில் இரண்டு மூன்று முறை மட்டுமே கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று தயாளு அம்மாவை சந்தித்தார். அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் அனைத்து தோல்வி அடைந்தது. 

இந்நிலையில் மு.க.அழகிரி சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் என்றும், தேர்தல் வந்தால் எத்தனை பேர் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என்பது தெரியும். உண்மையான தொண்டர்கள் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்றார். அண்மையில் திமுகவில் நநடைபெற்ற போராட்டங்களின் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினை அழகிரி கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

மக்கள்Jun 11, 2018 - 04:54:06 PM | Posted IP 162.1*****

போயா ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam

Joseph Marketing

New Shape Tailors







Thoothukudi Business Directory