» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சென்னையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

வெள்ளி 8, ஜூன் 2018 11:23:43 AM (IST)



சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

அனைத்து நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்து கொள்ளும், புதிய உடல் பரிசோதனை மையமாக இது உருவாகி உள்ளது. மேலும் இந்த மையத்தில் ரத்த பரிசோதனை முதல் மார்பக வரைவு, எலும்பு தின்மை அளவீடு உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் செய்துகொள்ள முடியும். அம்மா கோல்ட் திட்டத்தின் கீழ் 1000 செலுத்தி 60 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம். அம்மா டைமண்ட் திட்டத்தின் கீழ் 2000 செலுத்தி 65 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம். அம்மா பிளாட்டினம் திட்டத்தின் கீழ் 3000 செலுத்தி 70 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையின் தரை தளத்தில் அமைந்துள்ள இந்த பரிசோதனை மையம் முழுவதுமாகக் குளிரூட்டப்பட்டுள்ளது. எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. முழு உடல் பரிசோதனைகளுக்காக 7338835555 மற்றும் 044-2566611 என்ற எண்களில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் என்று கருதப்படுகிறது. இந்த துவக்க விழாவில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education

Joseph Marketing


Anbu Communications

Black Forest Cakes


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory