» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன் 11, ஏப்ரல் 2018 4:20:10 PM (IST)

காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் போராட்டம் தொடரும் என திருவாரூரில் நடந்த காவிரி உரிமை மீட்பு பயணத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வரும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவிரி நீர் பிரச்சினை என்பது இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நிறைவேற்றிட மத்திய அரசு முன்வரவில்லை. தமிழகத்தை ஆளுகின்ற அ.தி.மு.க. அரசு, மத்திய அரசை வலியுறுத்த தவறி விட்டது. 

இதனால் போராட்ட களங்களை தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாக்கப்பட்டுள்ளோம். கடந்த 7-ந் தேதி காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி மாவட்டத்தில் தொடங்கி தஞ்சை வழியாக வந்து 4-வது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் நடத்திக்கொண்டு இருக்கிறோம்.காவிரி நீர் வாழ்வாதார பிரச்சினையாக இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கட்சி பாகுபாடு பார்க்காமல் அரசியலை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர். பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்டு என்ற பழமொழிக்கேற்ப நான் அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் காட்டுவதை விரும்புகிறேன். காவிரி நீர் பிரச்சினை குறித்து முழுமையாக அறிந்து தெரிந்தவர் தலைவர் கருணாநிதி தான்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். இதேபோல் அரியலூரில் இருந்து மற்றொரு பயணமும் தொடங்கியுள்ளது. இந்த இரு பயணக்குழுவும் வருகிற 12-ந் தேதி கடலூரில் சங்கமிக்கின்றோம். அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனை தொடர்ந்து 13-ந் தேதி அங்கிருந்து பேரணியாக புறபட்டு சென்னை செல்கிறோம். சென்னை ராஜ்பவனில் கவர்னரை நேரில் சந்திக்க உள்ளோம். இதற்காக காலை 12.30 மணிக்கு கவர்னர் நேரம் தந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

அப்போது காவிரி நீர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கான காரணம் குறித்து எடுத்து சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்திட உள்ளோம். தற்போது உச்சநீதிமன்றம்  காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் மே மாதம் 3-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. அதற்குள் உரிய பதிலை தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. எனவே நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

சாமிApr 16, 2018 - 04:11:27 PM | Posted IP 162.1*****

இவருடைய - தந்தையே - இந்த பிரச்சினையின் மூல முதற்காரணம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing


Black Forest Cakes


CSC Computer Education


Anbu Communications

New Shape Tailors

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory