» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் அன்புமணி ராமதாசால் மட்டுமே நல்லாட்சி கொடுக்க முடியும்: ராமதாஸ் பேச்சு

சனி 10, மார்ச் 2018 12:18:37 PM (IST)

தமிழகத்தில் அன்புமணி ராமதாசால் மட்டுமே நல்லாட்சி கொடுக்க முடியும் என்று மேட்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

மேட்டூர் சதுரங்காடியில் நேற்று பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கண்ணையன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை தலைவர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் மக்கள் வாழ்க்கையை பற்றி கவலை படாமல், தங்களது குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதிலேயே குறியாக உள்ளனர். 

மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ஜி.கே.மணி இருந்தபோது, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல், தொகுதி மக்களுக்காக 24 மணி நேரமும் உழைத்தார். அதனால் தான் 9-வது முறையாக அவரை பா.ம.க.வின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளோம். ஆனால் நீங்கள் ரூ.100, ரூ.200-க்கு ஆசைப்பட்டு தேர்தலில் அவரை தோற்கடித்துவிட்டீர்கள். இதனால் உங்கள் தொகுதி ஒரு நல்ல எம்.எல்.ஏ.வை இழந்துள்ளது. தமிழகத்தில் டாக்டர் அன்புமணி ராமதாசால் மட்டுமே நல்லாட்சியை கொடுக்க முடியும். அவர் ஆட்சியில் அமர்ந்தால் தான் தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.


மக்கள் கருத்து

நாட்டான்Mar 12, 2018 - 04:33:25 PM | Posted IP 86.98*****

எத்தினை காலம் ஏமாற்றுவாய்?

D . துரைMar 10, 2018 - 04:59:02 PM | Posted IP 59.90*****

சாமி கொசு தொல்லை தாங்க முடியல பா

சாமான்யன்Mar 10, 2018 - 01:42:29 PM | Posted IP 157.5*****

பாழாய் போன சாதி ஒரு பண்பாளரின் குறுக்கே!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Anbu Communications

New Shape Tailors


Joseph Marketing

CSC Computer EducationThoothukudi Business Directory