» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்படும் : டிடிவி. தினகரன் பேட்டி

புதன் 7, பிப்ரவரி 2018 10:28:12 AM (IST)

தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி. தினகரன் கூறினார்.

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பைபாஸ் சாலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது: மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இத்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என மத்திய அமைச்சர் கூறினாலும், இவை வந்தால் நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாகி, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, குடிநீர் பிரச்னையும் ஏற்படும் என தமிழக மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஜெயலலிதா ஆட்சியில் தமிழக மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்கவில்லை. 

ஆனால் போலியாக ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியில், தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டார்களோ என்ற பயம் மக்கள் மத்தியில் உள்ளது. தமிழக மக்களின் அச்சத்தைப் போக்க மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை நாங்கள் அமைப்போம். தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிப்போம். 

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கதிராமங்கலத்தை பாதுகாக்க போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது கமிஷன் ஆட்சிதான் நடக்கிறது. அந்த முகாமில் 6 பேரை தவிர்த்து யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அந்த 6 பேரும் திருந்தி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

விவசாயத் தொழிலை காக்க, நாம் நமது பகுதியில் இருக்கும் ஏரி, குளங்களை தூர்வாரி, மழை நீரையும், காவிரி நீரையும் சேமிக்க வேண்டும். பேருந்து கட்டணத்தை குறைத்து, விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்குவோம். மக்கள் விரும்பும் ஆட்சியை அமைப்போம். அதற்கு உங்களது ஆதரவு தேவை என்றார் டிடிவி. தினகரன்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திடீர் தீ விபத்து நடந்தது வருந்தத்தக்கது. இதில் அரசியல் லாபம் ஈட்டுவதற்காக சிலர் சதி இருப்பதாக பொய் குற்றச்சாட்டு கூறுகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மதச்சார்பற்ற நமது நாட்டில் இதை வைத்து, கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுவது நியாயமற்றது. தவறான கோரிக்கை. தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. என்னை நம்பி 18 எம்எல்ஏக்கள் வந்துள்ளனர். எனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை. 

ஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த 18 பேரில் ஒருவர் கூட முதல்வராகலாம். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், சசிகலாவுக்கு பதிலாக அவரது வழக்குரைஞர் ஆஜராவார் என்றார். நாங்கள் கட்சியில்லாமல் செயல்பட்டு வருகிறோம்; எங்களுக்கு குக்கர் சின்னமும், கட்சிப் பெயரும் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். சின்னம் தருவது மாநில தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தீர்ப்பில், இதற்கு நீதிபதி சரியான பதில் கூறுவார். அடுத்ததாக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம் என்றார் டிடிவி. தினகரன். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Joseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory