» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நான் அரசியலுக்கு வருவது உறுதி: 234 தொகுதியிலும் தனித்து போட்டி: ரஜினிகாந்த் அறிவிப்பு

ஞாயிறு 31, டிசம்பர் 2017 9:23:54 AM (IST)

நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். 

சென்னையில் டிச. 26ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக தனது ரசிகர்களை ரஜினிகாந்த், 2-வது கட்டமாகச் சந்தித்து வருகிறார். இந்த நிலையில், சந்திப்பின் இறுதிநாளான இன்று அவர் பேசும் போது,  கட்டுப்பாடு, ஒழுக்கம் இருந்தால் போதும் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். 

அரசியலுக்கு வருவது குறித்து, எனக்கு எந்த பயமும் இல்லை, ஊடகங்களிடையே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்று எனக்கு சோ அன்றே சொல்லி தந்திருக்கிறார். அரசியலுக்கு வருவது குறித்து நான் பில்டப் கொடுக்கவில்லை. அதுவாகவே பில்டப் ஆகிறது. இந்த நேரத்தில் நான் முடிவெடுக்காவிடில் குற்ற உணர்வு நான் சாகும் வரை இருக்கும்.அதனால் இன்று என்  முடிவை அறிவிக்கிறேன். வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன். நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். பெயர், புகழ், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரப்போவதில்லை. 

எனக்கு ஏறகனவே அதையெல்லாம் ஆயிரம் மடங்கு கொடுத்துவிட்டீர்கள். பதவி ஆசை எனக்கு இல்லை. அப்படி இருந்திருந்தால் 45 வயதில் எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்திருர்ப்பேன். 45 வயதில் இல்லாத ஆசை 65 வயதிலா வந்துவிடப் போகிறது. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போகிறோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை. நாடாளுமன்ற தேர்தலின் போது சில முக்கிய முடிவு எடுப்பேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். 

கட்சி அறிவிப்பு வரும் வரை அரசியல் விமர்சனம் வேண்டாம். அறிக்க்கை அரசியல் செய்யவும்  போராடவும் நிறைய பேர் இருக்காங்க, ஜனநாயகம் என்ற பெயரில் கட்சிகள் சொந்த நாட்டு மக்களிடம் கொள்ளையடிக்கின்றனர்.  வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்வேன்.  வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் நம்ம படையும் இருக்கும். ஆண்டவன் இருக்கான். வாழ்க தமிழ்மக்கள் வாழ்க ஜனநாயகம்.  ஜெய்ஹிந்த். என பேசி முடித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors

CSC Computer Education

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory