» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தீபா வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

செவ்வாய் 5, டிசம்பர் 2017 4:58:38 PM (IST)

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெயலலிதாவின் அண்ணண் மகள் தீபா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, டி.டி.வி. தினகரன், நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்களின் பரிசீலனை இன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் திமுகவின் மருது கணேஷ், அதிமுகவின் மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரன் மற்றும் பாஜக வேட்பாளர் நாகராஜன் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் நடிகர் விஷாலின் மனு மீதான பரிசீலனை நடைபெற்ற பொழுது திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இன்று மாலை விஷால் வேட்பு மனுபரிசீலனை நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பரிசீலனை துவங்கிய பொழுது ஜெயலலிதாவின் அண்ணண் மகள் தீபா தாக்கல் செய்த வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்பொழுது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டிய படிவம் 26 நிரப்பப்படவிலை என்றும், மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களில் முழுமையில்லை என்பதாலும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads



crescentopticals

New Shape Tailors


Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory